கோபுகான் ஷித்தோரியூ கராத்தே பள்ளி சார்பில் 15-வது அகில இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஜெ.ஜெ.உள்விளையாட்டு அரங்கில் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
கட்டா, குமிதே பிரிவுகளில் நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 600 பேர் கலந்து கொள்கிறார்கள். இந்த தகவலை கோபுகான் ஷித்தோரியூ அமைப்பின் டெக்னிக்கல் இயக்குனர் எம்.கனகராஜ் தெரிவித்துள்ளார்.