2 போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் அணி

சார்ஜாவில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே 2 போட்டிகளில் வென்ற பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ்-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் நடைபெற்றது.

முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 281 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 337 ரன்களும் எடுத்தன. இரண்டாம் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய பாகிஸ்தான் அணி நான்காம் நாள் ஆட்டத்தின்போது 208 ரன்களில் சுருண்டது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 153 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.  இந்த எளிய இலக்குடன் இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் பிராத்வெயிட் நிதானமாக விளையாடினார்.

மறுமுனையில் சீரான இடைவெளியில் 5 பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் பிராத்வெயிட்டுடன் டோரிச் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஆட்டத்தின்போக்கு வெஸ்ட் இண்டீசுக்கு சாதகமாக திரும்பியது.  ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வெயிட் 44 ரன்களுடனும், டோரிச் 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றிக்கு 36 ரன்களே தேவை என்ற நிலையில், தொடர்ந்து ஆடிய பிராத்வெயிட், டோரிச் இருவரும் தலா 60 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் வெற்றி இலக்கை எட்டினர்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  கேப்டன் ஹோல்டர் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. பிராத்வெயிட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.   3 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதால், 2-1 என  தொடரை கைப்பற்றியுள்ளது. 21 விக்கெட்டுகள் கைப்பற்றிய யாசிர் ஷா தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அணிசார்ஜாடெஸ்ட்போட்டிவெற்றிவெஸ்ட்இன்டீஸ்
Comments (0)
Add Comment