இந்த நிலையில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் நேற்று துவங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 370 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த போட்டியோடு சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள பிரென்டன் மெக்கல்லம் தனது கடைசி போட்டியில் 54 பந்துகளில் சதம் அடித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார். நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 370 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலியா, தொடக்க ஆட்டகாரர் டெவிட் வார்னரை 12 ரன்னில் இழந்தது. ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஜோ பர்ன்ஸ் சிறப்பாக ஆடி 170 ரன்கள் குவித்தார். அதேபோல் அந்த அணி கேப்டன் சுமித்தும் (132) சதம் அடித்தார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் குவித்துள்ளது.