2-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது. மேற்கிந்திய தீவுகள் – வங்காளதேச அணிகளுக்கிடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற வங்கதேச அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 380 ஓட்டங்கள் பெற்றது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி கேமர் ரோச்சின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. இதனால் வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தனது முதல் இன்னிங்ஸை161 ஓட்டங்களில் முடித்துக்கொண்டது.

219 ஓட்டங்கள் முன்னிலை என்ற நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை தந்தனர்.

ஜான்சன் 41 ஓட்டங்களும், பிராத்வெய்ட் 45 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நேற்று மூன்றாம் நாள் ஆட்ட நேர இறுதியில் சந்தர்பால் 63 ஓட்டங்களுடனும், பிளாக்வுட் 43 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இன்று மீண்டும் தங்கள் ஆட்டத்தை இருவரும் தொடர்ந்து விளையாடினர். சிறப்பாக விளையாடிய சந்தர்பால் சதம் அடித்தார். தனது இரண்டாவது இன்னிங்ஸில் 269 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்டத்தை இடைநிறுத்தியது.

489 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேச வீரர்களின் தொடக்கம் நன்றாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தமீம் இக்பால், ஷம்சுர் ரஹ்மான் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 47 ஓட்டங்களை சேர்த்திருந்த போது ஷம்சுர் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ஷம்சுர் 27 பந்தில் 39 ஓட்டங்கள் குவித்தார்.

5 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்திருந்த வங்கதேச அணியில் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் நடையை கட்டியதால் எஞ்சிய ஐந்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து இறுதியில் 192 ஓட்டங்களை மட்டும் பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பில் சுழற்பந்து வீச்சாளரான பென்ஸ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் 296 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சந்தர்பால் ஆட்டநாயகனாகவும், பிராத்வெயிட் தொடர் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

2-0 என்றஅணிஎதிரானகணக்கில்கைப்பற்றியுள்ளதுடெஸ்ட்தீவுகள்தொடரைமேற்கிந்தியவங்கதேசத்துக்கு
Comments (0)
Add Comment