இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 367 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளது. மான்செஸ்டரில் நடக்கும் 4வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 215 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ரூட் 77, பட்லர் 70, பெல் 58 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி முன்னிலை பெற உதவினர்.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் மற்றும் ஆரோன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 152 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து 367 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 215 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.