1990ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட இராணுவநடவடிக்கை காரணமாக வலிகாமம் வடக்கில் இருந்து இடம் பெயர்ந்து 25 வருடங்களாக அகதி முகாம்களில் வாழும் மாணவர்களின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இம்முகாம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இவ்மாணவர்களின் வளர்ச்சியில் அக்கறைகாட்டாத நிலமை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அன்றாடம் கூலி வேலை செய்து வரும் வருமானத்தில் தங்கள் குடும்பசுமையை நடத்துவதற்கு அல்லல்படும் இம் மக்கள் தங்கள் பிள்ளைகளை எவ்வாறு கல்வி கற்பிக்க முடியும்? இந்நிலையைக் கேள்விப்பட்ட வவுனியா எழுத்தாளர்கள் அரும்புகள் அமைப்பின் ஊடாக உதவுவதற்கு முன்வந்தார்கள். சபாபதிப்பிள்ளை, கண்ணகி நலன்புரி நிலையங்களில் உள்ள புலமைப்பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான மாலை நேர கற்றல் வகுப்புக்கள் ஆரம்பித்துள்ளன. அவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கியுள்ளார்கள்.
இவ்உதவியினை வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் ச.சஜீவன் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இவ் ஆரம்ப நிகழ்வை யாழ்ப்பாண மேலதிக அரசாங்க அதிபர் திரு.முரளிதரன் (காணி) அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள்.