3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழாவில் படோர்டாவில் நேற்றிரவு அரங்கேறிய 27-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் – எப்.சி.கோவா அணிகள் மோதின. முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.
பிற்பாதியில் ஆதிக்கம் செலுத்திய டெல்லி அணி அடுத்தடுத்து இரு கோல்களை திணித்தது. 72-வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் மார்செலோ பெரீராவும், 76-வது நிமிடத்தில் ரிச்சர்ட் காட்ஸியும் கோல் அடித்தனர். இறுதியில் டெல்லி டைனமோஸ் 2-0 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தியது.
முன்னதாக நேற்று முன்தினம் நடந்த சென்னையின் எப்.சி.- கேரளா பிளாஸ்டர்ஸ் இடையிலான ஆட்டம் கோல் இன்றி (0-0) டிரா ஆனது. போட்டியில் இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும்.