4 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்டுடன் பெண் யாழில் கைது!

மூன்று கோடியே 93 இலட்­சத்து 40 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான தங்­க­பிஸ்­கட்­டுக்­களை காரில் கடத்திக் கொண்­டி­ருந்த பெண் ஒரு­வரை யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் அலு­வ­ல­கத்தின் விசேட குழு­வினர் நேற்று கைது செய்­துள்­ளனர்.

கொழும்பில் இருந்து கார் ஒன்றின் ஊடாக யாழ்ப்­பா­ணத்­துக்கு 7 கிலோ நிறைகொண்ட குறித்த தங்­கமும் மேலும் சில வெளி நாட்டு நாண­யங்கள் மற்றும் உள் நாட்டு நாண­யங்கள் கடத்­தப்ப்ட்­டுக்­கொண்­டி­ருந்த போது யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ருக்கு தகவல் கிடைத்­துள்­ளது. அதற்கு அமை­வா­கவே கடத்தல் முறி­ய­டிக்­கப்­பட்டு காரில் இருந்த 50 வய­தான பெண் ஒருவர் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

இந்த சம்­பவம் தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது,

நேற்று அதி­காலை 3.55 மணிக்கு யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் டப்­ளியூ.கே.ஜய­லத்­துக்கு காரொன்றில் தங்கம் கடத்­தப்­ப­டு­வ­தாக தகவல் கிடைத்­துள்­ளது. இத­னை­ய­டுத்து தலைமை பொலிஸ் பரி­சோ­தகர் ஒரு­வரின் கீழான விஷேட குழு­வொன்றை இது தொடர்­பி­லான நட­வ­டிக்­கை­க­ளுக்­காக சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஜயலத் அனுப்பி வைத்­துள்ளார்.

இந்த குழு­வா­னது யாழ். சாவ­கச்­சேரி, சங்­கத்­தானி ரயில் நிலை­யத்­துக்கு அருகே வைத்து சந்­தே­கத்­துக்கு இட­மான குறித்த காரை நிறுத்தி சோத­னைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளது. இதன் போது காருக்குள் இருந்து 7 கிலோ நிறைக் கொண்ட சுமார் 70 தங்க பிஸ்­கட்­டுக்­களை மீட்ட பொலிஸார் வெளி நாட்டு உள் நாட்டு நாண­யங்கள் பல­வற்­றையும் கைப்­பற்­றினர். கொழும்பில் இருந்தே இந்த தங்க பிஸ்­கட்­டுக்­களும் பணமும் யாழ்ப்­பா­ணத்­துக்கு கடத்தி வரப்­பட்­ட­தாக ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் உறுதி செய்­துள்ள பொலிஸார்., பெரும்­பாலும் கடல் மார்க்­க­மாக இந்­தி­யாவின் தமிழ் நாட்டு பிர­தே­சத்­துக்கு கடத்­து­வதே இதன் நோக்­க­மாக இருக்­கலாம் என சந்­தே­கிக்­கின்­றனர்.

கைது செய்­யப்­பட்ட சந்­தே­கத்­துக்கு இட­மான பெண் குறித்த பெருந் தொகை தங்கம் தனக்கு எவ்­வாறு கிடைத்­தது என்பது தொடர்பில் பதிலளிக்க முடியாமல் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜயலத்தின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

4 கோடி பெறுமதியானகைதுதங்கபிஸ்கட்டுடன்பெண்யாழில்
Comments (0)
Add Comment