60 போட்டிகளில் அணித்தலைவராக சாதனை படைத்துள்ளார் கம்பீர்

கொல்கத்தா அணித்தலைவராக இருக்கும் கம்பீர் தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் அதிகமுறை அணித்தலைவராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாடி வரும் கொல்கத்தா அணியின் அணித்தலைவராக கம்பீர் இருக்கிறார். இவரது தலைமையில் கொல்கத்தா அணி மிரட்டி வருகிறது. ஐ.பி.எல் தொடரில் 2 முறை கிண்ணம் வென்ற கொல்கத்தா அணி 12 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் கடைசி போட்டியில் பெர்த் அணியை வீழ்த்தியதில், கம்பீர் தொடர்ச்சியாக 60 போட்டிகளில் அணித்தலைவராக அணியை வழிநடத்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் சென்னை அணியின் அணித்தலைவராக உள்ள டோனியை (59) இவர் முந்தியுள்ளார். வில்லியம் போர்ட்டர்பீல்டு (அயர்லாந்து), டேரில் மிட்செல் ( இங்கிலாந்து), ஷேன் வார்ன் (அவுஸ்திரேலியா) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

மேலும் அதிகமுறை டி20 போட்டிகளில் அணித்தலைவராக உள்ளவர்களில் டோனி முதலிடத்தில் இருக்கிறார். இவர் 182 போட்டிகளில் சென்னை மற்றும் இந்திய அணிக்காக அணித்தலைவராக இருந்துள்ளார். அடுத்த இடத்தில் கம்பீர் (99 போட்டிகள்) இருக்கிறார்.

அணித்தலைவராகஅதிகமுறைஇருக்கும்இருந்தவர்என்றகம்பீர்கொல்கத்தாடி20தொடர்ச்சியாகபெருமையைபெற்றுள்ளார்போட்டிகளில்
Comments (0)
Add Comment