92 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்தியா

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடைபெற்று வந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 566 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.   பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில், 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து பாலோ ஆன் ஆனது.

பிராத்வைட்(74), டவுரிச்(57), ஹோல்டர்(36) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். முகமது சமி, உமேஷ் யாதவ் தலா 4 விக்கெட்டுக்களை சாய்த்தனர். மிஸ்ரா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.   இதனை தொடர்ந்து மீண்டும் பேட்டிங் செய்யும்படி இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை கேட்டுக் கொண்டது. 323 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை வெஸ்ட் இண்டீஸ் அணி தொடங்கியது. 3-ம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 13 ஓவர்களில் 21 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.   முதல் இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிராத்வைட் 2 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

சந்திரிகா(9), டேரன் பிராவோ(10) ரன்களில் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னும் 302 ரன்கள் இந்தியாவை விட பின் தங்கி இருந்தது.   இதனை தொடர்ந்து 4-வது நாள் ஆட்டம் நேற்று நள்ளிரவு தொடங்கியது. தொடக்கத்திலே பிராவோ விக்கெட்டை உமேஷ் யாதவ் கைப்பற்றினார். பின்னர் சிறிது மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனையடுத்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது முதல் அஸ்வின் கையே ஓங்கி இருந்தது. அஸ்வின் பந்து வீச்சில் விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணம் இருந்தது.   இறுதியில் 78 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 231 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது. அஸ்வின் 25 ஓவர்கள் வீசி 83 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுக்களை சாய்த்தார். இதனால், இந்திய அணி இன்னிங்ஸ், 92 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.   சதம் விளாசியதோடு, 7 விக்கெட்டுக்களை சாய்த்த அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கின்றது.

அணிஆன்டிகுவாஇந்தியாகிரிகட்டாஸ்டெஸ்ட்பேட்டிங்வெற்றிவெஸ்ட்இன்டீஸ்
Comments (0)
Add Comment