92 வயது மூதாட்டி மாரத்தான் பந்தயத்தில் பங்கேற்று சாதனை

மாரத்தான் ஓட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த 92 வயது மூதாட்டி ஒருவர் பங்கேற்று சாதனை புரிந்தார்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியை ஹரியேட் தாம்ஸ்சன் (Harriette Thompson) என்ற மூதாட்டி மாரத்தான் ஓட்டத்தில் கலந்துக்கொண்டு சாதனை செய்துள்ளார். இதன் மூலம், மிக அதிக வயதில் மாரத்தன் ஓட்டத்தில் பந்தய இலக்கை முழுமையாக ஓடிக் கடந்தவர் என்ற சாதனையை அவர் நிலைநாட்டினார்.

சான் டீகோ (San Diego) நகரில் நடைபெற்ற போட்டியில் பந்தய இலக்கை கடக்க, ஏழு மணி நேரம், 24 நிமிடங்கள், 36 நொடிகளை அவர் எடுத்துக்கொண்டார். சாதனை புரிந்துள்ள மூதாட்டி ஹரியேட் தாம்ஸ்சன் (Harriette Thompson) புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்.

எனினும், தள்ளாத வயதிலும் தளராத முயற்சி எடுத்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதாக மூதாட்டி ஹரியேட் தனது பூரிப்பை வெளிப்படுத்தினார்.

அமெரிக்காசாதனைமாரத்தான்முயற்சிமூதாட்டிஹரியேட் தாம்ஸ்சன்
Comments (0)
Add Comment