அமெரிக்காவின் நோட்ரிடாம் பல்கலைக்கழகத்தின் தேசிய சமுத்திரவியல் மற்றும் வளிமண்டல நிர்வாகப் பிரிவின் நிபுணர்களுடம் அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானமொன்று இலங்கைக்கு சென்றுள்ளது.
இலங்கையின் மேலடுக்கு வளிமண்டலம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவே அவர்கள் அங்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சிறப்புக் கருவிகள் பொருத்தப்பட்ட அமெரிக்க விமானப்படையின் விமானத்தில் குறித்த நிபுணர்கள் நேற்றுமுன்தினம் அங்கு சென்றுள்ளனர்.
இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகளுடன் இணைந்து அமெரிக்க நிபுணர்கள் பத்துத் தினங்கள் மேற்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.