மேஷம்:
மற்றவரை விமர்சிக்க சிலர் உங்களை துண்டுவர். தொழில், வியாபாரத்தில் பொறுப்பு அதிகரிக்கும். லாபம் மிதமாக இருக்கும்.
ரிஷபம்:
எதிர்மறை சிந்தனை கொண்டவர்களிடம் விலகுவது நல்லது.தொழில், வியாபாரத்தில் திட்டமிட்டபணி நிறைவேற தாமதமாகும்.
மிதுனம்:
புதிய திட்டம் செயல் வடிவம் பெறும்.தொழில், வியாபாரத்தில் முன்னேற விடாமுயற்சியுடன் பணிபுரிவீர்கள். வருமானம் திருப்தி தரும்.
கடகம்:
செயல்களில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபார நடைமுறையை சீர்படுத்துவீர்கள். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர்.
சிம்மம்:
பிறர் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை வளர்ச்சி பெறும். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும்.
கன்னி:
அறிமுகம் இல்லாதவரிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பை பயன்படுத்தவும். பணவரவு சீரான அளவில் கிடைக்கும்.
துலாம்:
வாழ்வில் இனிய அனுபவம் உண்டாகும். தொழில் வியாபாரத் தொடர்பு பலம் பெறும். ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.
விருச்சிகம்:
மனதில் இருந்த குழப்பம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி திட்டமிட்டபடி நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும்.
தனுசு:
கூடுதல் பணிகளால் பரபரப்புடன் இருப்பீர்கள். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். பணவரவு சுமாராக இருக்கும்.
மகரம்:
உடல்நலனில் உரிய கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரத்தில் மறைமுகப் போட்டி அதிகரிக்கும். லாபம் சுமாராக இருக்கும்.
கும்பம்:
தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிக்கும் விதத்தில் லாபம் கிடைக்கும்.
மீனம்:
அன்பால் அனைவரையும் அரவணைப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும்.