இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் மோதும் உலகக்கிண்ண தொடருக்கான ‘பி’ பிரிவு லீக் போட்டி பெர்த்தில் இன்று நடந்தது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் துடிப்பெடுத்தாடியது.

ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சில் திக்குமுக்காடிப் போன எமிரேட்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியின் அன்வர் மட்டும் அதிகபட்சமாக 35 ஓட்டங்கள் எடுத்தார்.

குராம் 14 ஓட்டங்களும், மஞ்சுளா 10 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் நடையை கட்டினர். இதனால் அந்த அணி 31.3 ஓவர்களிலே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய தரப்பில், சுழலில் அசத்திய அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உமேஷ் யாதவ், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், மொகித் சர்மா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து 103 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 1 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை எட்டியது. 104 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தவான் 14 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ரோஹித் (57), கோஹ்லி (33) ஜோடி சேர்ந்து அணியை வெற்றியடைச் செய்தனர்.

பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்திய இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.

அணிகள்இந்தியாஉலகக்கிண்ணம்ஐக்கிய அரபு எமிரேட்ஸ்லீக் ஆட்டம்விக்கெட்டுகள்வித்தியாசம்வெற்றி
Comments (0)
Add Comment