மேஷம்
இன்று பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும் வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். இதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள்.
ரிஷபம்
இன்று உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி இலாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். காரிய வெற்றி உண்டாகும். பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களைச் சாதிப்பீர்கள். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுப்பது நன்மை தரும்.
மிதுனம்
இன்று உடல் ஆரோக்கியம் ஏற்படும். மனதிலிருந்த குழப்பம், கவலை நீங்கும். தைரியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைத்தாலும் செலவும் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
கடகம்
இன்று உத்தியோகத்திலிருப்பவர்கள் தயக்கத்துடன் தங்களது பணிகளை செய்ய வேண்டி இருக்கும். இயந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாகவிருப்பது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையிலிருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளிடம் கவனமாகப் பேசுவது நல்லது.
சிம்மம்
இன்று உறவினர்கள் வருகை இருக்கும். சொத்துக்கள் வாங்க எடுக்கும் முயற்சிகள் தாமதப்படும். எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற மிகவும் கவனமாக பாடங்களைப் படிப்பீர்கள். மனக் குழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும்.
கன்னி
இன்று சில அத்தியாவசியத் தேவைகளுக்குச் செலவு செய்யப் பணப்பற்றாக் குறையைச் சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும்.
துலாம்
இன்று உங்கள் விடா முயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வாழ்க்கை வளம் பெறும். பணப் பற்றாக்குறை நீங்கும். மற்றவர்களால் குற்றம் சாட்டப்படும் சூழ்நிலை உருவாகலாம் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும்.
விருச்சிகம்
இன்று கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கடும் முயற்சிக்குப் பின் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். மனோ தைரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும்.
தனுசு
இன்று உத்தியோகத்திலிருப்பவர்கள் திறமையாகப் பணிகளைச் செய்து பாராட்டுப் பெறுவார்கள். சிலருக்குப் பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் கஷ்டம், சுகம் இரண்டும் ஏற்படலாம்.
மகரம்
இன்று எல்லோரும் நட்புடன் பழகுவார்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக இழுபறியாகவிருந்த காரியம் நடந்து முடியும். மாணவர்கள் அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும்படியாகப் பாடங்களைப் படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். திறமை வெளிப்படும்.
கும்பம்
இன்று பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா? வேண்டாமா? எனச் சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பு உண்டாகலாம். நிலவி வந்த பிரச்சினைகள் மறையும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.
மீனம்
இன்று எதிலும் இலாபம் கிடைக்கும். காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண் கவலை நீங்கும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள்.