இன்றைய ராசிபலன்…

மேஷம்
இன்று மனோதிடம் பளிச்சிடும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த குறிப்பிட்ட நன்மை நடக்கும் நாள். எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும். சில தொல்லைகள் தவிர்க்க முடியாமற் போகும்.
ரிஷபம்

இன்று முழுபலமும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பொருளாதார சங்கடங்கள் உருவாகாது. அன்றாடப் பணிகள் சரிவர நடைபெறும். உற்சாகத்துடன் இந்த நாளை கழிப்பீர்கள்.

 

மிதுனம்

இன்று நன்மைகளை அனுபவம் மூலமாக கிடைக்கப் பெறுவீர்கள். உறவினரால் ஒரு தொல்லை ஏற்படலாம். மேலதிகாரிகளில் கண்டிப்புக்கு ஆளாக நேரிடலாம்.

கடகம்

இன்று அவ்வப்போது சின்னச் சின்ன வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் மிகவும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். வெளியிடங்களில் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும்.

சிம்மம்

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.

கன்னி

இன்று குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

துலாம்

இன்று எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.

விருச்சிகம்

இன்று எல்லா நன்மைகளும் வந்து சேரும். மனோதிடம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள்.

தனுசு

இன்று தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

மகரம்

இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம்.

கும்பம்

இன்று நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும்.

மீனம்

இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.

நாள்பலன்ராசி
Comments (0)
Add Comment