ஆனால், எமது மக்கள் பல்வேறு பிரச்சினைகளையும், தொடர்ச்சியான பாதிப்புக்களையும் எதிர்நோக்கி வருகின்றனர். தற்போதும் அவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன.
இந்நிலையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பதில் கூற வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், தொடர்ந்தும் காணிகள் ஆக்கிரமிப்பது நிறுத்தப்பட வேண்டும், இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் மற்றும் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற, ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தே, இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். காலை 8 மணிமுதல் 10 மணிவரை, மிகவும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்கள், கைதிகள் மற்றும் காணாலாக்கப்பட்டோர்களது உறவினர்கள் என, பல தரப்பினர், கலந்துகொள்ளவுள்ளனர்” என்றார்.