நிகழ்வில் முதலில் பொதுச்சுடரினை இயக்குனர்களில் ஒருவரான திரு மோகன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழ தேசியக்கொடியினை திரு தாஸ் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து பிரித்தானிய கொடியினை திரு மயில்வாகனன் ஜயா அவர்கள் ஏற்றிவைக்க அதை தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது .
தொடர்ந்து பொது மாவீரர் கல்லறைக்கான சுடரினை நாட்டுப்பற்றாளர் அமரர் கதிரவேலு பாலசிங்கத்தின் புதல்வியும் போராளியுமான திருமதி மதுரா சுடர் அவர்கள் ஏற்றிவைத்தார். மலர் மாலையை போராளி பூங்குயில் அவர்கள் அணிவித்தார் . பொது மக்கள் நினைவுத் தூபிக்கான சுடரினை அற்புத விநாயகர் ஆலய தர்மகர்த்தா திருமதி நவமணி அவர்கள் ஏற்றிவைக்க மலர்மாலையை மூத்த போராளியும் புலேந்தி அம்மானின் சகோதரனுமானதிரு வி னோத் அவர்கள் அணிவித்தார் .
தொடர்ந்து உரித்துடையோருக்கான நிகழ்வுகள் வரிசையில் ஈகைப்பேரொளி முருகதாசின் திருவுருவப் படத்திற்கான சுடரினை நாடுகடந்த அரசாங்கத்தின் அவை உறுப்பினர் திரு நிமலன் அவர்கள் ஏற்றிவைக்க மலர்மாலையை முருகதாசின் தாயார் திருமதி வர்ணகுலசிங்கம் அவர்கள் அணிவித்தார் . கப்டன் நெடியோன் , மேஜர் குமுதன் , வீரவேங்கை அருந்தமிழ் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு அவர்களது சகோதரன் திரு ரவி மற்றும் சிவகுமார் சடர் ஏற்றி மலர்துவி அஞ்சலி செய்தார்கள் .தொடர்ந்து நாட்டுப்பற்றாளர் திரு பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அவரது இளைய புதல்வன் திரு குமரேசன் (தீபன்) அவர்கள் சுடர் எற்றி மலர்தூவி அஞ்சலி செய்தார்.
லெப்டினன்ட் கவியரசனின் திருவுருவப் படத்திற்கு அவரின் சகோதரி கவிதா அவர்கள் சுடர் ஏற்றிவைத்தார் .தொடர்ந்து வான் கரும்புலிகள் கேணல் ருபன் , லெப் கேணல் சிரித்திரன்”ஆகியோரின் திருவுருவப் படத்திற்கான மலர்மாலையை போராளி திரு சூட்டி அணிவித்தார் தொடர்ந்து போருதவிப் படைவீரர் 2ம் லெப் கஜமுகனின் திருவுருவப் படத்திற்கான சுடரினை அவரது சகோதரனும் லெப் கேணல் தோழநம்பியின் திருவுருவப்படத்திற்கான சுடரினை அவரது சகோதரன் திரு சசிக்குமாரும்ஏற்றிவைக்க மேஜர் தாரகை அவர்களின் திருவுருவப் படத்திற்கு அவரின்சகோதரி திருமதி சுமங்கலி ஜங்கரன் அவர்கள் சுடரேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தினர் .
தொடர்ந்து விடுதலை பாடல்களை திரு சுரேஸ் மற்றும் மைக்கல் ஆகியோர் இசைத்தனர் . நினைவுரையை திரு தயாபரன் , எல்லாளன் ஆகியோர் நிகழ்த்தினர் . அத்துடன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர் .அத்துடன் வழமை போல அற்புத விநாயகர் ஆலயத்தில் பூசை பொங்கல் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்று இம்மாத நினைவுவணக்க நிகழ்வு மிகவும் உணல்வெழிச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது..