ஐரோப்பா, வட அமெரிக்கா, தென்அமெரிக்கா கண்டங்களில் இன்று முழுச் சந்திர கிரகணம்….

முழுநிலவு நாளான இன்று  ஐரோப்பா, வட அமெரிக்கா, தென்அமெரிக்கா கண்டங்களில் முழுச் சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது.

சூரியனில் இருந்து வரும் கதிர்கள் நிலவின் மீது படாமல் புவி மறைப்பதால் ஏற்படுவது சந்திர கிரகணம் ஆகும்.

பௌர்ணமி  நாளில் வரும் இந்தக் கிரகணத்தின்போது நிலா, புவி, சூரியன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும். இத்தகைய சந்திர கிரகணம் இன்றிரவு தோன்றுகிறது.

அந்தவகையில் தென்னமெரிக்காவிலும் வட அமெரிக்காவிலும் முழுச் சந்திர கிரகணம் தென்படும்.

கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, அயர்லாந்து, பிரிட்டன், நார்வே, சுவீடன், போர்ச்சுகல், பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் கிரகணம் தென்படும்.

பிற ஐரோப்பிய நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் நிலவு மறையும் நேரத்தில் பகுதியளவு கிரகணம் தெரியும்.

ஆனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,  மற்றும் ஆசிய நாடுகளிலும் கிரகணம் தென்படாது எனவும் கூறப்படுகின்றது.

ஐரோப்பாசந்திர கிரகணம்தென்அமெரிக்காபௌர்ணமிவட அமெரிக்கா
Comments (0)
Add Comment