கணவனை வற்புறுத்திய ஈபிடிபி – ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் சொன்ன பெண்

பல முறை ஈ.பி.டி.பி யினர் கணவரை தம்முடன் இணையுமாறு வற்புறுத்தினர். அதனால்   தான்  வெள்ளை வானில் வந்து கடத்திச் சென்றிருக்கிறார்கள்  என கணவரை காணாத பெண்ணொருவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார்.

அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் நாங்கள் 2006 ஆம் ஆண்டு இருக்கும் போது வெள்ளை வானில் வந்தவர்களால் எனது கணவர் வீட்டில் நின்றவேளை கடத்திச் செல்லப்பட்டார். அப்போது இராணுவமும் , ஈ.பி.டி.பியும் தான்  அங்கு இருந்தன. எங்கள்  வீட்டுக்குப் பக்கத்தில் அவர்கள்  தான்  இருக்கின்றார்கள். கணவர் சாரதியாக வேலை செய்து வந்தார். பல தடவைகள்  எனது கணவரை தங்களுடன் இணைந்து வேலை செய்யமாறு ஈ.பி.டி.பியினர் கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் விருபமில்லை என்று கூறிவிட்டு இருந்துவிட்டார்.

அந்தக் கோபத்தில் தான் கணவரைக் கடத்தியிருக்கிறார்கள் .அவர்களையே நான்  சந்தேகிக்கின்றேன். எனக்கு யாரும் உதவியில்லை. பிள்ளைகளைப் படிப்பிக்க கூட மிகவும் சிரமப்படுறன். கூலி வேலைக்கு போய் தான் வாழ்க்கை நடாத்துகின்றோம். எனக்கு எனது கணவர் கிடைக்க வேண்டும். அதற்கு உதவி செய்யுங்கள்  என ஆணைக்குழுவிற்கு சாட்சியமளித்தார்.

அளித்தஆணைக்குழுவில்சாட்சியம்பெண்
Comments (0)
Add Comment