கனா படத்தை பாராட்டிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்…

நடிகர் சிவகார்த்திக்கேயன் நடிப்பில் உருவாகியுள்ள கனா படம் மிக சிறந்த விழிப்புணர்வு படமாகவே  கருதப்படுகிறது.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

கனா படத்தில் விவசாயத்தை பற்றி மிக சிறந்த முறையில் எடுத்து காட்டியுள்ளனர்.

அதோடு   படத்தில் பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உள்ள தடைகள் பற்றி கூறியுள்ளனர். முக்கியமாக இந்த படத்தில் மகளீர் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுத்துள்ளனர்.

இந்நிலையில்   இந்த படம் குறித்து இயக்குனர் முருகதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அந்த ட்வீட்டில் ” கிரிக்கெட்டையும்,விவசாயத்தையும் கிளைமாக்சில் சரியாக இணைத்துள்ளார். இதற்காக இயக்குனர் அருண்ராஜ் காமராஜுக்கு பாராட்டுக்கள் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள் என கூறியுள்ளார்  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் .

 

இயக்குனர்ஏ.ஆர்.முருகதாஸ்கனாசிவகார்த்திக்கேயன்பாராட்டு
Comments (0)
Add Comment