ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கக்கூடும் என்று உளவுத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து உள்துறை அமைச்சர் நாஜ்நாத் சிங் தலைமையில் காவல் துறை, பாதுகாப்பு துறை, உளவுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 13 மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் ஆயுதங்கள், வெடிகுண்டுகளை கையாள பயிற்சி பெற்ற 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களை மனித வெடிகுண்டுகளாக்கி மோடியை கொலை செய்ய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளது குறித்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று மோடி செங்கோட்டையில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி வந்து குழந்தைகளை சந்தித்து கை குலுக்கினார். இதை கவனித்த தீவிரவாதிகள் சில சிறுவர்கள் செங்கோட்டைக்கு அனுப்பி வைத்து தாக்குதல் நடத்தலாம் என்று கருதப்படுகிறது.