இதேவேளை, வெளிப்படையானதும் வினைத்திறன் மிக்கதுமான அரசியலமைப்பையே நாம் உருவாக்கவுள்ளோமெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.225 பேரைக் கொண்ட அரசியலமைப்புச் சபையினூடாக இது தொடர்பான செயற்பாடுகள் வெளிப்படையாகவே மேற்கொள்ளப்படும். இது தொடர்பில் மாகாண சபைகளுடனும் வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
சர்வாதிகாரமாக ஜுண்டோ முறையில் ஜீ.எஸ். பீரிஸ் போல் அரசியலமைப்பை உருவாக்கக்கூடாது என்று ஜனாதிபதியும் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் மக்கள் கருத்தும் இதற்குப் பெறப்படும் என்றும் தெரிவித்தார்.
வடக்கு மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் படையினரிடமுள்ள 4,600 ஏக்கர் காணியை மீளக்கையளிப்பதற்கான தீர்மானம் எட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர்கள், உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் ஒரு முடிவுக்கு வரவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்