வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் மக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் நேற்று உரையாற்றிய அவர், தமிழ் மொழி பேசும் மக்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டுள்ளனர். போர் காரணமாக அநாதரவான நிலையில் வாழ்ந்து வரும் அப்பாவி மக்களுக்கு இந்த வரவு செலவுத்திட்டத்தில் நன்மைகள் கிடைக்கும் எதிர்பார்த்தோம்
எனினும் இந்த வரவு செலவுத் திட்டத்திலும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலன்கள் கிடைக்கவில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் இதுவரையில் எவ்வித தீர்வுத்திட்டத்தையும் முன்வைக்கவில்லை என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.