வவுனியா புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான அமலதாஸ் (வயது46) என்பவரே நேற்றைய தினம் திடீரென மரணித்துள்ள போராளியாவார். அமலாதாஸ் அவர்கள் 2011.04.23 அன்று புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நல்ல சுகதேகத்துடன் ஆரோக்கியமாகவே காணப்பட்டார் என்றும் நேற்றைய தினம் திடீரென மயக்கமுற்று வீழ்ந்து மரணித்துள்ளார், என்றும் இறந்தவரின் உறவினர்கள் தெரிவிப்பதோடு தமக்கு இதில் பலத்த சந்தேகம் உள்ளதாகவும் விஷ ஊசி ஏற்றப்பட்டிருக்கும் என ஊகிப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.