மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய விராட்

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க வீரர் ஏ. பி. டிவிலியர்ஸ் 869 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

இந்தியாவின் விராட் கோஹ்லி, மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். இவர், சமீபத்தில் முடிந்த மேற்கிந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 191 ஓட்டங்கள் எடுத்து, இந்திய அணி தொடரை கைப்பற்ற உதவினார்.

இதனையடுத்து தென் ஆப்ரிக்காவின் ஹசிம் ஆம்லா, 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்திய தரப்பில், இந்திய அணி அணித்தலைவர் டோனி 757 புள்ளிகளுடன் 6வது இடத்தை மீண்டும் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் 722 புள்ளிகளுடன் 8வது இடத்தையும், நடுக்கள ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா 650 புள்ளிகளுடன் 15 இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஆப்பிரிக்காஏ.பி.டிவிலியர்ஸ்ஒரு நாள் போட்டிகிரிக்கெட்சர்வதேசம்டோனிபட்டியல்வாரியம்விராட் கோஹ்லிவீரர்கள்வெளியீடுஷிகர் தவான்ஹசிம் ஆம்லா
Comments (0)
Add Comment