வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்த புஜாரா

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் டெர்பிஷயர் அணியில் விளையாடி வரும் இந்திய அணியின் துடுப்பாட்டக்காரர் புஜாரா வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்துள்ளார்.

லீஷயர் அணிக்கு எதிரான 4 நாள் கிரிக்கெட் போட்டி நேற்று டெர்பி மைதானத்தில் தொடங்கியது. இதில் 4ஆம் நிலையில் களமிறங்கிய புஜாரா 21 பந்துகளைச் சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இருந்தார். அப்போது ஆட்டத்தின் 20வது ஓவரில் லீஷயரின் பந்து வீச்சாளர் அடிஃப் ஷேய்க் பந்து வீசினார்.

அந்த ஓவரின் கடைசி பந்தை ஷெய்க் வீச புஜாரா கையால் தட்டி விட்டதாக நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டார்.

அதாவது பந்தைத் தடுத்தாடியுள்ளார் புஜாரா. ஆனால் பந்து ஸ்டம்பிற்குள் செல்லும் போல் தெரிந்தவுடன் கிளவ்வினால் பந்தைத் தட்டி விட்டார். உடனடியாக லீஷயர் வீரர்கள் முறையீடு செய்தனர்.

நடுவர்கள் இருவரும் கலந்தாலோசித்த பிறகு புஜாரா அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தில் `ஹேண்டில்ட் தி பால்’ முறையில் அவுட் ஆவது புஜாரா தான்.

அப்போதும் இதே டெர்பி அணியைச் சேர்ந்த கார்ல் கிரைக்கன் என்ற வீரர் இந்தியாவுக்கு எதிராக இதே மைதானத்தில் பந்தைக் கையால் பிடித்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணியின்அணியில்ஆட்டமிழந்துள்ளார்.இங்கிலாந்துஇந்தியகவுண்டிகிரிக்கெட்டில்டெர்பிஷயர்துடுப்பாட்டக்காரர்புஜாராமுறையில்வரும்வித்தியாசமானவிளையாடி
Comments (0)
Add Comment