இதுபற்றி தெரியவருவதாவது பள்ளமடு பகுதியில் ஒரு வைத்தியசாலை இருப்பதாகவும் அங்கு நிரந்தர வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ் வைத்தியர் கடந்த புதன் கிழமை விடுமுறையில் சென்றுள்ளார். கடந்த புதன் கிழமை முதல் சனிக்கிழமை காலைவரை இந் நோயாளர்கள் சிகிச்சைக்காக சென்றபோது வைத்தியர் இன்மையால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.
இதுமட்டுமல்ல கடந்த வெள்ளிக்கிழமை கிளினிக் நாள் என நோயாளர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதிகமான முதியோர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
வைத்தியர் வருவார் என அங்கு கடமையில் இருந்தவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து பலர் பசிபட்டினியுடன் காவல் இருந்ததாகவும் பின் வைத்தியர் வராமையால் ஏமாற்றத்துடன் திரும்பியதாக பாதிப்படைந்தோர் கவலையுடன் தெரிவித்தனர். ஆனால், அன்று வைத்தியர் வரவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வாகன வசதிகள் அற்ற இப்பகுதியிலுள்ள பல நோயாளர்கள் ஓரிரு தினங்களாக ஏமாற்றத்துடன் திரும்பியது அவர்களுக்கு வேதனைகளை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவ் வைத்தியசாலையை நம்பி பள்ளமடு, கள்ளியடி, இலுப்பைக்கடவை, மூன்றாம்பிட்டி, விடத்தல்தீவு, பெரியமடு, ஈச்சலவக்கை, சன்னார் போன்ற பல கிராம மக்கள் இருப்பதாகவும் பரந்து வாழும் இப்பகுதி கிராம மக்கள் போக்குவரத்து வசதிகள் அற்று பல மைல்கள் தொலைவிலிருந்து வருவதால் இவ் ஏமாற்றம் நோயாளர்களை மிகவும் மனச்சஞ்சலத்துக்கு உள் ளாக்கியுள்ளதாகவும் தெரி விக்கப்படுகின்றது. மன்னார் சுகாதார சேவைகள் திணைக் களத்தின் அசமந்தப்போக்கே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.