தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வைத்தியர்கள் இல்லாமல் அவதிப்படும் பள்ளமடு மக்கள்!

 mannar hospitalமன்னார் மாந்தை பிர­தேச செய­ல­கத்­துக்கு உட்­பட்ட பள்­ள­மடு வைத்­தி­ய­சா­லையில் கடந்த நான்கு நாட்­க­ளாக வைத்­தியர் இன்­மையால் அவ் வைத்­தி­ய­சா­லைக்கு சிகிச்­சை பெற சென்ற நோயா­ளர்கள் ஏமாற்­றத்­துடன் திரும்­பி­ய­தா­கவும் மன்னார் சுகா­தார சேவைகள் திணைக்­க­ளத்தின் அச­மந்­தப் போக்கே இதற்கு முக்­கிய காரணம் எனவும் மக்கள் கவலை தெரி­விக்­கின்­றனர்.

இது­பற்றி தெரி­ய­வ­ரு­வ­தா­வது பள்­ள­மடு பகுதியில் ஒரு வைத்­தி­ய­சாலை இருப்­ப­தா­கவும் அங்கு நிரந்­தர வைத்­தியர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இவ் வைத்­தியர் கடந்த புதன் கிழமை விடு­முறையில் சென்­றுள்ளார். கடந்த புதன் கிழமை முதல் சனிக்­கி­ழமை காலை­வரை இந் நோயா­ளர்கள் சிகிச்­சைக்­காக சென்­ற­போது வைத்­தியர் இன்­மையால் ஏமாற்­றத்­துடன் வீடு திரும்­பி­யுள்­ளனர்.

இது­மட்­டு­மல்ல கடந்த வெள்­ளிக்­கி­ழமை கிளினிக் நாள் என நோயா­ளர்­க­ளுக்கு தெரி­யப்­படுத்­தப்­பட்­டுள்­ளதைத் தொடர்ந்து அதி­க­மான முதி­யோர்கள் பல சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் வைத்­தி­ய­சா­லைக்கு சென்­றுள்­ளனர்.

வைத்­தியர் வருவார் என அங்கு கட­மையில் இருந்­த­வர்கள் தெரி­வித்­ததைத் தொடர்ந்து பலர் பசி­ப­ட்­டி­னி­யுடன் காவல் இருந்­த­தா­கவும் பின் வைத்­தியர் வரா­மையால் ஏமாற்­றத்­துடன் திரும்­பி­ய­தாக பாதிப்­ப­டைந்தோர் கவ­லை­யுடன் தெரி­வித்­தனர். ஆனால், அன்று வைத்­தியர் வர­வில்­லை­யெனவும் தெரி­விக்கப்படுகின்றது.

வாகன வச­திகள் அற்ற இப்­ப­கு­தி­யி­லுள்ள பல நோயா­ளர்கள் ஓரிரு தினங்­க­ளாக ஏமாற்­றத்­துடன் திரும்­பி­யது அவர்­க­ளுக்கு வேத­னை­களை உரு­வாக்­கி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கின்­றனர்.

இவ் வைத்­தி­யசாலையை நம்பி பள்­ள­மடு, கள்­ளி­யடி, இலுப்­பைக்­க­டவை, மூன்­றாம்­பிட்டி, விடத்­தல்­தீவு, பெரி­ய­மடு, ஈச்­ச­ல­வக்கை, சன்னார் போன்ற பல கிரா­ம­ மக்கள் இருப்­ப­தா­கவும் பரந்து வாழும் இப்­ப­குதி கிராம மக்கள் போக்­கு­வ­ரத்து வச­திகள் அற்று பல மைல்கள் தொலைவிலிருந்து வருவதால் இவ் ஏமாற்றம் நோயாளர்களை மிகவும் மனச்சஞ்சலத்துக்கு உள் ளாக்கியுள்ளதாகவும் தெரி விக்கப்படுகின்றது. மன்னார் சுகாதார சேவைகள் திணைக் களத்தின் அசமந்தப்போக்கே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments
Loading...