கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தான் உள்ளிட்ட இருவர் பணம் பெற்றிருக்கவில்லையென அண்மையில் தனது வீட்டிற்கு தேடிவந்த ஊடகவியலாளர்களிடம் சி.சிறீதரன் வாதிட்டிருந்தார்.
இந்நிலையில் இரா.சம்பந்தனும் தானும் இரண்டு கோடி பெற்றதை உறுதிப்படுத்தியிருந்த நிலையில் சி.சிறீதரன் மட்டும் கள்ள மௌனம் சாதித்திருந்தார்.
இந்நிலையில் ஊடகவியலாளர் த.ஜெயபாலன் என்பவர்; தகவல் அறியும் சட்டத்தின் மூலம் சி.சிறீதரன் எம்பி இரண்டு கோடி பெற்றதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழரசுக்கட்சியினர் மக்களை தொடர்ந்தும் முட்டாள்கள் ஆக்க முடியாதென்பது இதன் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழரசுக்கட்சியின் எம்.ஏ.சுமந்திரன் முதல் இரட்ணஜீவன் கூல் வரை ஊடகவியலாளர்களை அண்மைக்காலமாக திட்டிவருவது குறிப்பிடத்தக்கது.