தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அதிமுக அரசு புதிய திட்டங்களை அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல்: விஜயகாந்த்

vijayakanthதமிழக அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் கிடப்பில் உள்ள நிலையில், தற்போது புதிய திட்டங்களை அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக அரசு துறைகளில் நடைபெறும் ஊழல் குறித்து அரசு ஊழியர்கள் தகவல் வெளியிட்டால் அவர்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.

 மேலும், தமிழகத்திலுள்ள அதிமுக அரசு பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியது, அரசின் நிர்வாகமின்மையை வெளிப்படுத்துவதாக அவர் கூறியிருக்கிறார். தமிழக அரசின் புதிய நலத்திட்ட அறிவிப்புகளை பார்த்தால் ”பத்தோடு பதினொன்னு அத்தோடு இதுவும் ஒன்னு” என்ற பழமொழி தான் தமது நினைவுக்கு வருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...