Designed by Iniyas LTD
1981 ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பில் இன்று மன்னிப்புக் கோரி நீலிக்கண்ணீர் வடிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
1981 ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பில் இன்று மன்னிப்புக் கோரிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
ச
1981 ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பில் இன்று மன்னிப்புக் கோரிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அந்தக் காலப்பகுதியில் நடந்த சம்பவத்திற்கும் கூட்டு எதிர்க்கட்சி மன்னிப்புக் கோர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
“1981 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசாங்கத்தின் போது யாழ்ப்பாணத்தில் உள்ள பொது நூலகம் எரிக்கப்பட்டது. அது தவறு என்று எங்களுக்குத் தெரியும், அதற்காக மன்னிப்புக் கோருகிறோம்,” என்று அவர் கூறினார்.
“உங்கள் அரசாங்கம் செய்த தவறுகளுக்கு நீங்களும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அவர் அப்போது தம்மைக் கூச்சலிட்ட கூட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் கூறினார்.
போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் முறையான வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கையை எதிர்த்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க திரு. விக்கிரமசிங்க எழுந்தபோது சபையில் அலறல் ஏற்பட்டது.
“வடக்கில் 80 வீதமான வீடுகள் புனரமைக்கப்படுவதை நாங்கள் காண விரும்புகிறோம், மேலும் இது தொடர்பாக வடக்கு பிரதிநிதிகளுடன் கலந்துரையாட தயாராக உள்ளோம்” என்று பிரதமர் மேலும் கூறினார்.
யாழ்.நூலகம் எரிக்கப்பட்ட நாள் இன்று! யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள் இன்றாகும்.1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் இந்தக் கொடூரம் இடம்பெற்றது. ஈழத் தமிழ் மக்களை மாத்திரமின்றி உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது இந்த நிகழ்வு.20ஆம் நூற்றாண்டின் இன-நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது. இந்த நூலக எரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது. யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது.முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது. யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு விசமிகளால் எரிக்கப்பட்ட நூலகம் இன்று மீண்டும் புத்துயிர் பெற்று மிளிர்கின்றது.

