தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமெரிக்காவை தாக்கிய சக்தி வாய்ந்த புயல் – 13 பேர் பலி…

100 வருடங்களில்   அமெரிக்காவை தாக்கிய  அதிசக்திவாய்ந்த  மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் இறந்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது

குறித்த புயலால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அரசாங்கம்  அறிவித்துள்ளது.

முதலில் புளோரிடா மாகாணத்தை தாக்கிய புயல் பின்னர் அலபாமா, ஜார்ஜியா மாகாணங்களையும் தாக்கியுள்ளது.

அதோடு மணிக்கு 200-ல் இருந்து 240 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்றுடன்   பலத்த மழையும் பெய்துள்ளது.

இந்த சூறாவளியால் கடலிலில் கொந்தளிப்பு ஏற்பட்டு. வழக்கத்தை விட 12 அடி உயரத்துக்கு ராட்ச அலைகள் எழுந்ததனால்   பல இடங்களில் நிலப்பரப்புக்குள் தண்ணீர் புகுந்தது.

இதேவேளை  புளோரிடா நகரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளம் புகுந்ததனால் ஏற்பட்டதனால். அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றதாக் தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...