தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமைச்சர் ஸ்மிருதி இரானியின் உருவபொம்மை எரிப்பு-தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்!

மாணவர்கள் அமைப்பான அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவைக் கண்டித்து ஐஐடி மட்டுமின்றி சென்னையின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

10151343_400668293453662_1409705955079794186_n

கருத்துச் சுதந்திரத்திற்கு தடை போடும் ஐஐடி நிர்வாகத்தை கண்டித்து மத்திய கைலாஷில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானியின் உருவ பொம்மையை அவர்கள் எரித்தனர்.

11329743_400668123453679_4659699515253456596_n

இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல், சாஸ்திரிபவன் எதிரே காங்கிரஸ் கட்சியின் ஆதி திராவிடர் பிரிவினர் போராட்டம் நடத்தினர். மாணவர் அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்க வேண்டும் என அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.

11393010_400668163453675_3621724118888844729_n

Comments
Loading...