தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆளில்லா விமானத்தால் அவசரமாக மூடப்பட்ட டுபாய் விமான நிலையம்

டுபாய் சர்வதேச விமான நிலையம் அருகே திடீரென்று தோன்றிய ஆளில்லா விமானத்தினால் பரபரப்பு நிலை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக டுபாய் விமான நிலைய வான் எல்லை அவசரமாக மூடப்பட்டது.Dubai-airport

உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் வான்வெளியில் நேற்று காலை திடீரென்று தோன்றிய ஆளில்லா விமானத்தால், அந்தப் பகுதி வான் எல்லை அவசரமாக மூடப்பட்டது.

காலை 11.36 மணியில் இருந்து 12.45 மணிவரை அங்கிருந்து விமானங்கள் புறப்பட்டு செல்லவோ, தரையிறங்கவோ அனுமதிக்கப்படவில்லை. இதனால் 22 விமானங்கள் டுபாய் சென்ட்ரல் விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக டுபாய் விமான நிலைய தலைமை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையங்கள் மற்றும் ஹெலிபேட்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் வரையிலான பகுதிகளில் இதுபோன்ற ஆளில்லா விமானங்களை பறக்க விடுவது சட்டபுறம்பான செயல் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Comments
Loading...