தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இது இனப்படுகொலையா? இல்லையா? ஆவணப்படம் வெளியீடு

இது இனப்படுகொலையா இல்லையா?” சென்னையில் வெளியாகும் கௌதமனின் புதிய  ஆவணப்படம் 

இலங்கையில் தமிழினம் படும் அவலங்கள் குறித்து இதுவரை பத்திற்கும் மேற்பட்ட ஆவணப் படங்களை இயக்கிய இயக்குனர் கௌதமன் அவர்களின் படைப்பாக்கத்தில் “இது இனப்படுகொலையா? இல்லையா?” என்கிற புதிய ஆவணப்படம் சென்னையில் நாளை வெளியிட்டு வைக்கப்பட உள்ளது. 

உலகத் தமிழர் பேரமைப்பின் ஏற்பாட்டில் இன்று 13.05.2015 புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டூடியோவில் (கமலா திரையரங்கம் அருகில்) ஆவணப்படம் வெளியீடு, திரையிடல் நடைபெற உள்ளது.

முதன் முறையாக ஈழத் தமிழினத்துக்காக குரல் கொடுக்கும் அனைத்து தலைவர்களும் ஒரே மேடையில் ஓரணியில் நின்று ஆவணப் படத்தை வெளியிட்டு வைக்கவுள்ளமை இதன் சிறப்பம்சமாகும். அனைத்து மாணவ இயக்கங்களும், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர்களும் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

இனப்படுகொலைக்கு எதிரான இந்த ஆவணத்தை அறிவாயுதமாக ஏந்த தமிழின உணர்வாளர்கள் அனைவரையும் உரிமையுடன் அழைக்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள்.

gow Gowtham_Documentaary

Comments
Loading...