தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இங்கிலாந்தின் மைக்கேல் சோப்ரா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் சச்சினின் கேரளா கால்பந்து அணி சார்பில் இங்கிலாந்தின் மைக்கேல் சோப்ரா, ரூ. 35 லட்சத்துக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.joint_football_001

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்குப் பின், பாட்மின்டன், ஹாக்கி மற்றும் கபடி போட்டிகளும் இம்முறையில் நடக்கின்றன. இந்த வரிசையில் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர், வரும் அக்டோபர் 12 முதல் டிசம்பர் 20 வரை நடக்கவுள்ளது. இதற்கு இந்திய கால்பந்து கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் ‘ஜாம்பவான்’ சச்சினின் கேரளா, முன்னாள் அணித்தலைவர் கங்குலியின் கோல்கட்டா மற்றும் மும்பை, டெல்லி, கேரளா உட்பட மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன. பெங்களூரு அணி கடைசி நேரத்தில் விலகியதால், சென்னை அணி சேர்க்கப்பட்டது.

இந்த அணிகளில் 84 இந்திய வீரர்கள் ஏற்கனவே இடம் பெற்றுள்ளனர். மற்றபடி, ஒவ்வொரு அணிகளும் 7 வெளிநாட்டு வீரர்களை சேர்த்துக் கொள்ளலாம்.இதற்கான 56 வீரர்களில் 7 பேர் ஏற்கனவே பல்வேறு அணிகளில் இடம் பெற்றனர். மீதமுள்ள 49 பேரை தெரிவு செய்ய நேற்று மும்பையில் கூட்டம் நடந்தது.

இதில் இந்திய– இங்கிலாந்து வம்சாவளி ‘முன்கள’ வீரர் மைக்கேல் சோப்ராவை ரூ. 35 லட்சம் கொடுத்து, சச்சினின் கேரளா அணி வாங்கியது. நியூகேசில், சந்தர்லாண்டு, கார்டிப் அணிகளில் விளையாடிய அனுபவம் இவருக்கு இருக்கிறது.

மொத்தம் 49 வீரர்களுக்கு, ரூ. 16 கோடி வரை கொடுக்கப்பட்டது. கோவா அணி 7 வீரர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 2.46 கோடி வரை செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...