Designed by Iniyas LTD
இந்தியா-பாகிஸ்தான் இடையே வரும் 15-ம் தேதி பேச்சுவார்த்தை
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான வெளியுறவுத்துறை செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி திடீர் பயணமாக நேற்று பாகிஸ்தான் சென்றதையடுத்து இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. வெளியுறவு செயலாளர் எஸ். ஜெய்சங்கர் இஸ்லாமாபாத் சென்று பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் சர்தாஜ் அஜீஸ் உடன் பேச்சு நடத்த உள்ளதாக தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நடைபெற கூடு்ம் என எதிர்பார்க்கப்படுகிறது.