தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தோனேசியாவில் பலத்த நிலச்சரிவு

இந்தோனேசியா நாட்டில், மத்திய ஜாவா மாகாணத்தில் நேற்று முன்தினம் இடைவிடாமல் பேய் மழை பெய்தது. இதன்காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக பலத்த நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.intho

அவற்றில் வசித்து வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பேய் மழைக்கு 24 பேர் பலியாகிவிட்டனர். 26 பேர் காணாமல் போய் விட்டனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், போலீசார், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி தேசிய பேரிடர் மீட்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுட்டோபோ நுக்ரோஹோ கூறுகையில், ‘‘மத்திய ஜாவா மாகாணத்தில் 16 பிரதிநிதி ஆட்சி பகுதிகளில் மழை கொட்டி தீர்த்து விட்டது.

இதன் காரணமாக பல இடங்களில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன’’ என குறிப்பிட்டார். அங்கு மாமூல் வாழ்க்கை பெரும்பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Comments
Loading...