தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்றைய இராசிபலன்கள் …..

மேக்ஷம்

இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் காணப்படாது. கணவன்- மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மனத் திருப்தியைத் தரும்.

ரிக்ஷபம்

இன்று தொலைதூரத் தகவல்கள் மன மகிழ்ச்சியைத் தருவதாகவிருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். திறமை வெளிப்படும். மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும்.

மிதுனம்

இன்று முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். தொழில் வியாபாரத்திலிருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும்.

கடகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும்.

சிம்மம்

இன்று முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களைச் செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

கன்னி

இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்தவொரு காரியத்தையும் ஆராய்ந்து பார்த்துச் செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும்.

துலாம்

இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள்.

விருட்சிகம்

இன்று எந்தவொரு காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்துச் செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். பணவரத்துத் திருப்திகரமாகவிருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

தனுசு

இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்திலிருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள்.

மகரம்

இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டைப் புதுப்பிப்பது போன்ற பணிகளைத் தொடங்க முற்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும்

கும்பம்

இன்று விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீகப் பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். சந்திரன் சஞ்சாரத்தால் இடமாற்றம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும்.

மீனம்

இன்று கூட்டுத் தொழில், வியாபாரத்திலிருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்திலிருப்பவர்களுக்குத் திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம்.

Comments
Loading...