தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்றைய நாளில்…

நிகழ்வுகள்

கிமு 33 – ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாண்டிரியா ந்கரைக் கைப்பற்றி ரோமக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான்.

1291 – சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

1498 – கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.

1619 – முதலாவது ஆபிரிக்க அடிமைகள் வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரை அடைந்தனர்.

1774 – ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

1793 – உலகிலேயே மெட்ரிக் அளவு முறையை முதன்முதலாக அறிமுகப்படுத்திய நாடு பிரான்ஸ்

1831 – புதிய லண்டன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

1902 – பனாமா கால்வாயுக்கான உரிமையை ஐக்கிய அமெரிக்கா பிரான்சிடம் இருந்து வாங்கியது.

1907 – சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.

1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது.

1914 – இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1927 – சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் கொமிந்தாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.

1936 – பெர்லினில் 11வது ஒலிம்பிக் விளையாட்டுகக்ள் ஆரம்பமாயின.

1941 – முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.

1944 – போலந்தில் வார்சா நகரில் நாசிகளுக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.

1952 – தந்தை பெரியார் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.

1960 – டஹோமி (பெனின்) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1960 – பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.

1964 – பெல்ஜிய கொங்கோவின் பெயர் கொங்கோ குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.

1990 – எஸ்.பி.சி என்றழைக்கப்பட்ட சிங்கப்பூர் ஒளிபரப்புக் கழகம் முதன் முதலாக ஸ்டீரியோ ஒலியில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது

2002 – தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

2006 – இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

பிறப்பு

1935 – சோக்கல்லோ சண்முகநாதன், இலங்கை மேடை நாடக, வில்லுப்பாட்டு கலைஞர்

1944 – டெல்லி கணேஷ், தமிழகத் திரைப்பட, நாடக நடிகர்

1946 – குப்பிழான் ஐ. சண்முகம், ஈழத்து எழுத்தாளர்

1949 – குர்மான்பெக் பாக்கியெவ், கிர்கித்தானின் 2வது அரசுத்தலைவர்

1952 – வி. ராதாகிருஷ்ணன், இலங்கை மலையக அரசியல்வாதி

1967 – ஜோஸ் பாடில்கா, பிரேசில் இயக்குநர்

1969 – கிரகாம் தோர்ப், ஆங்கிலேயத் துடுப்பாளர்

1984 – பாஸ்தியான் இசுவைன்சுடைகர், செருமன் கால்பந்தாட்ட வீரர்

1987 – டாப்சி பன்னு, இந்திய நடிகை

இறப்பு

1714 – பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன் (பி. 1665)

1787 – அல்போன்ஸ் மரிய லிகோரி, இத்தாலியப் புனிதர் (பி. 1696)

1868 – பீட்டர் ஜூலியன் ஐமார்ட், பிரெஞ்சு கத்தோலிக்க குரு (பி. 1811)

1920 – பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1856)

1944 – மானுவல் எல். குவிசோன், பிலிப்பீனின்2வது அரசுத்தலைவர் (பி. 1878)

1967 – ரிச்சர்ட் குன், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-செருமானிய வேதியியலாளர் (பி. 1900)

1974 – மு. இராமலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1908)

1982 – தா. திருநாவுக்கரசு, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1933)

1999 – நீரத் சந்திர சவுத்ரி, வங்காளதேச-ஆங்கிலேய வரலாற்றாளர் (பி. 1897)

2008 – ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், இந்திய அரசியல்வாதி (பி. 1916)

2009 – கொரசோன் அக்கினோ, பிலிப்பீன்சின் 11வது அரசுத்தலைவர் (பி. 1933)

சிறப்பு நாள்

உலக சாரணர் நாள்

அங்கோலா – இராணுவ நாள்

பெனின் – தேசிய நாள் (1960)

கொங்கோ – பெற்றோர் நாள்

லெபனான் – இராணுவ நாள்

சுவிட்சர்லாந்து – தேசிய நாள் (1291)

Comments
Loading...