தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X ஸ்மார்ட்போன் சார்ந்து வெளியான தகவல்களில், ஐபோன் X ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. எனினும் ஆப்பிள் இந்த அம்சத்தை ஐபோன் X மாடலில் வழங்கவில்லை.

முழுமையாக தயாராகாத காரணத்தால் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் அம்சம் வழங்கப்படவில்லை என்றாலும் ஐபோன் X ஸ்மார்ட்போனில் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை ஆப்பிள் வழங்கியது. ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து ஒன்பிளஸ், சாம்சங் மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்பட்டது.

முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. எனினும் இந்த அம்சம் தற்போதைக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஸ்ரேகை ஸ்கேனர் பின்புறம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை விவோ நிறுவனம் வெளியிடலாம் என கூறப்பட்டது. சமீபத்தில் பிரபல டிப்ஸ்டர் எவான் பிளாஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் டூகி நிறுவனம் வெளியிட இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.

இத்துடன் புதிய டூகி வி ஸ்மார்ட்போனின் புகைப்படங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் புதிய டூகி வி ஸ்மாபர்ட்போனில் 6.2 இன்ச் டிஸ்ப்ளே, ஆப்பிள் ஐபோன் X சார்ந்த வடிவமைப்பு காணப்படுகிறது. டூகி வி வடிவமைப்பு பார்க்க ஐபோன் X மற்றும் சாம்சங் கேலக்ஸி S8 சீரிஸ் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளதை போன்று காட்சியளிக்கிறது.

எனினும் இதுவரை எந்த நிறுவனமும் இதுபோன்ற தொழில்நுட்பத்தை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இன்-ஸ்கிரீன் கைரேகை ஸ்கேனர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை டூகி, விவோ போன்ற நிறுவனங்கள் வெளியிடுமா அல்லது சாம்சங், எல்ஜி போன்ற நிறுவனங்கள் வழங்குமா என்பதை காத்திருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

Comments
Loading...