Designed by Iniyas LTD
இபோலாவால் உலகளாவிய ஆபத்து ஏற்பட இனியும் வாய்ப்பு உள்ளது – டோனி பேன்பரி
மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலா இரத்தக் காய்ச்சலை ஒழிக்க பங்காற்றி வரும் ஐநா செயலணியின் தலைவர், இந்த நோயைக் கட்டுப்படுத்த தங்களுக்குத் தாங்களே விதித்துக்கொண்ட காலக்கெடு கடந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
( இபோலாவால் உலகளாவிய ஆபத்து ஏற்பட இனியும் வாய்ப்பு உள்ளதென்கிறார் இந்நோய்க் கட்டுப்பாட்டுக்கான ஐநா செயலணியின் தலைவர் டோனி பேன்பரி )
இபோலாவால் வாடுவோரில் எழுபத்தைந்து சதவீதம் பேருக்கு இன்றைக்குள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றூம், இபோலாவால் இறந்தவர்களில் எழுபத்தைந்து சதவீதமானோர் பாதுகாப்பான முறையில் புதைக்கப்படுவதை இன்றைக்குள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் ஐநா விரும்பியிருந்தது.
மேற்கு ஆப்பிரிக்காவில் பல பாகங்களில் இந்த இலக்கை தாங்கள் எட்டியோ. இலக்கையும் தாண்டிய முன்னேற்றத்தி கண்டோ இருந்தாலும், எல்லா இடங்களிலும் இந்த இலக்கு எட்டப்படவில்லை என ஐநா செயலணித் தலைவர் டோனி பேன்பரி கூறினார்.
இந்த நோய் உலகின் பல பாகங்களுக்கும் பரவும் அபாயம் இப்போதும் பெரிய அளவில் இருக்கத்தான் செய்கிறது என பேன்பரி எச்சரித்துள்ளார்.