தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை பிரஜைகளை மீள ஒப்படைக்க மாலைதீவு அரசாங்கம் தீர்மானம்

மாலைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து இலங்கை பிரஜைகளையும் மீள ஒப்படைக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் மாலைத்தீவு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.maldives_CI

அதன்கீழ் மாலைத்தீவில் கைது செய்யப்பட்டுள்ள 15 இலங்கையர்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மாலைத்தீவு அரசின் அரசியல் யாப்புக்கு அமையவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக மாலைத்தீவு ஜனாதிபதி அலுவலகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மாலைத்தீவின் இந்த முடிவு குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...