Designed by Iniyas LTD
உலகக்கிண்ண தொடர் தொடங்கும் முன்னே இலங்கை அணிக்குள் சில பிரச்சனை வரும்
உலகக்கிண்ண தொடருக்கு முன்னர் இலங்கை அணியில் பெரும் பிரச்சனை வெடிக்க வாய்ப்பிருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டுக்கான உலகக்கிண்ண தொடர் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது. ஆனால் இந்த உலகக்கிண்ண தொடர் தொடங்கும் முன்னே இலங்கை அணிக்குள் சில பிரச்சனை வரும் என தெரிகிறது.
சர்வதேச நாடுகளின் உள்ளூர் போட்டிகளில் விளையாடும் மூத்த வீரர்களான சங்கக்காரா, மலிங்கா, பெரேரா , ஜெயவர்த்தனே ஆகிய வீரர்களின் மீது இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் கடும் அழுத்தங்களை கொடுப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கை வீரர்களை உலகக்கிண்ணத்தை விட்டு முழுமையாக நீக்கி ஐ.பி.எல் போன்ற போட்டிகளில் விளையாடுவதற்கு தூண்டியுள்ளதாகவும், உலகக்கிண்ணத்திற்கு வீரர்கள் தயாராகின்ற போதிலும் அவர்கள் பெரும்பாலும் பெப்ரவரி மாதத்தில் தங்கள் முடிவைத் தெரிவிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.