தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலகின் வட துருவ காந்தப் புலம் நகர்கின்றது – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை…

உலகத்தின் வட துருவ காந்தப் புலம் (Magnetic North Pole) தொடர்ந்து நகர்ந்து வருகிறதாகவும், அவை தலைகீழாகி வருவதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாற்றம் விரைவாக நிகழ்ந்துக் கொண்டிருப்பதாகவும்  அவர்கள் எச்சரித்துள்ளனர்.

7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன், இதே மாதிரியான மாற்றம் ஏற்பட்டதாகவும், தற்போது மீண்டும் அதே போல் காந்தப் புலம் தலைகீழாகி வருவதற்கான அறிகுறிகள் தெரிவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்

கடந்த  1881-ஆம் ஆண்டு வட புலம் துல்லியமாகக் குறிக்கப்பட்டதுஆயினும்அப்போதிருந்தே ஆண்டுக்கு, 10 கி.மீ.  இடம்பெயர்ந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த வேகம் தற்போது அதிகரித்து, ஆண்டுக்கு 30 முதல் 40 கி.மீட்டர் வரையிலும் வட காந்தப் புலம் நகர்ந்து கொண்டிருக்கிறதாக அவர்கள்  குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் திசைகாட்டிகளில் (compass) மாற்றம் ஏற்படத் தொடங்கிவிட்டதாகவும்,  இதன்காரணமாக கப்பல்கள்விமானங்கள்நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றில் உள்ள திசைகாட்டிகளை மேம்படுத்தி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments
Loading...