தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலகை வியக்க வைத்த பிரித்தானிய நாட்டு வைத்தியர்கள் சிலர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கையின்  ஆயுர்வேத மருத்துவம்   சர்வதேசம் வரை பிரபல்யம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பிரபலங்கள், விஞ்ஞானிகள் உட்பட பலர் இந்த ஆயுர்வேத மருத்துவத்தை ஆய்வு செய்வதற்காக இலங்கைக்கு செல்வதற்கு  தயாராகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஹொரிவில ஆயுர்வேத வைத்தியம் தொடர்பில் கற்பதற்காக உலகை வியக்க வைத்த பிரித்தானிய நாட்டு வைத்தியர்கள் சிலர் இலங்கைக்கு  விஜயம் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கு அவர்கள் பரம்பரை ஹொரிவில ஆயுர்வேத வைத்தியரான வைத்தியர் செனவிரத்னவிடம், பிரித்தானிய வைத்தியர்கள் ஆயுர்வேத வைத்தியத்தை கற்று கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  தீர்க்க முடியாதென தவிர்க்க அனைத்து விதமான நோயாளிகளுக்கும் ஆயுர்வேத சிசிக்சை அளித்து, அவர்களை முற்றாக நோயிலிருந்து விடுவிக்கும் அபூர்வ சக்தி படைத்தவராக ஆயுர்வேத வைத்தியரான வைத்தியர் செனவிரத்ன காணப்படுகின்றதாக தெரிவிகப்பட்டுள்ளமையும்  இங்கு  குறிப்பிடத்தக்கது

Comments
Loading...