தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலக வங்கியின் தலைவராக டிரம்பின் மகள் ..

உலக வங்கியின் தலைவராக பணியாற்றி வந்த தென் கொரியாவின் ஜிம் யோங் கிம் தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில் , கிறிஸ்டாலினா ஜியார்ஜியவா தற்காலிகமாக  உலக வங்கியின் தலைவராக பணியாற்றி வருகின்றார்.

உலக வங்கியின் மீது அமெரிக்கா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதற்காக தொடர்ந்து  குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், உலக வங்கியின் தலைவராக அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து ஐ.நாவின் அமெரிக்க முன்னாள் தூதர் நிக்கி ஹாலேவும் டிரம்பின் மகளை   பரிந்துரை செய்துள்ளார்.

இதேவேளை குறித்த விடயமானது  உலக அரசியலில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...