தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எதிர்வரும் 5ஆம் திகதி ஜெயின் பரிசுப்பொருள் வழக்கு

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக சி.பி.ஐ. தொடர்ந்துள்ள பரிசுப் பொருள் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி நீதிபதி சி.நாகப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.jeya

ஆனால் அவர் இந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டார். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 5-ந் தேதி நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இறுதி விசாரணைக்கு வருகிறது.  இந்த அமர்வுதான் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கையும் விசாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Comments
Loading...