Designed by Iniyas LTD
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜன மகிமய பேரணி..
ஜன மகிமய’ என்ற பெயரில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று கொழும்பில் பாரிய பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ள இந்தப் பேரணியில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கவுள்ளனர்.
பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஆதரவு தெரிவித்தே, குறித்த பேரணி இடம்பெறவுள்ளது.
இதற்காக 1500 பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்பில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவும், நாடாளுமன்றத்தை கூட்ட வலியுறுத்தியும் ஐக்கிய தேசியக் கட்சி கடந்த வாரம் பாரிய பேரணி ஒன்றை கொழும்பில் நடத்தியிந்தமை நினைவில்கொள்ளத்தக்கது..
அதற்குப் போட்டியாகவும், அனைத்துலக சமூகத்துக்கு, மக்களின் ஆதரவு தமக்கு இருக்கிறது என்பதை வெளிக்காட்டும் நோக்கிலேயே , இன்றைய பேரணி நடத்தப்படவுள்ளது.
குறித்த பேரணியில் தமது ஆதரவாளர்களை கொண்டு வருமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், கூட்டு எதிரணியும் தமது அமைப்பாளர்களுக்கு அறிவித்துள்ளன.
இந்நிலையில் பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் மகிந்த ராஜபக்சவும், கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிகபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.